Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விவசாயிகளுக்கு ரூ.5,000 கோடி கடனுதவி: அமைச்சர் காந்திராஜ் தகவல்

விவசாயிகளுக்கு ரூ.5,000 கோடி கடனுதவி: அமைச்சர் காந்திராஜ் தகவல்

தகுதியுள்ள ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும். கடனைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ஊரகத் தொழில் கடனுதவி திட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்தாக கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு, சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆண்டுக்கு 9 சதவீத சலுகை வட்டி விகிதத்தில், ரூ.5,000 கோடி கடனுதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊரகத் தொழில் கடனுதவி என்ற இந்தப் திட்டத்தின் கீழ், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மத்திய காலக் கடன்கள் வழங்கப்பட உள்ளன.

தகுதியுள்ள ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும். கடனைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், விவசாயிகளின் வசதிக்காகத் தொடக்கத்தில் 3 முதல் 6 மாதங்கள் வரை தவணை சலுகைக் காலமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ரூ.5 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.3,000 கோடியும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.2,000 கோடியும் கடன் வழங்கப்படும்.

குறு விவசாயிகள், பெண்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்படும். அதேநேரத்தில், பயனாளிகளின் கடன் தகுதியை முறையாக சரிபார்த்து, உரிய விதிமுறைகளைப் பின்பற்றி கடன் வழங்குமாறும், கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வசூல் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
US start-up plans to sell sunlight at night
அடுத்த செய்தி
Continues his jibe on Zelenskyy

தொடர்புடைய செய்திகள்